திருச்சி மாநகர பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஸ்ரீரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட் , பாலக்கரை, உறையூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்றதாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சி உறையூர் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக உறையூரைச் சேர்ந்த ஜெகதீசன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல ஏர்போர்ட், எடமலைப்பட்டிபுதூர், கோட்டை, தில்லை நகர், உறையூர் ஆகிய பகுதிகளில் பணம் வைத்து சூதாடியதாக 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தத்தில் திருச்சி மாநகரில் நேற்று ( 27.08.2023) நடந்த அதிரடி வேட்டையில் கஞ்சா, சூதாட்ட வழக்கில் மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.