Rock Fort Times
Online News

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்காத வேட்பாளர்கள்…!

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இளம் தலைமுறை வாக்காளர்கள் முதல் முதியவர்கள் வரை வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினர்.
ஆனால், இந்த தேர்தலில் போட்டியிட்ட 2 வேட்பாளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யவில்லை. மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவுக்கு, சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் வாக்கு உள்ளது. ஆனால், சொந்த ஊருக்குச் சென்று வாக்களித்துவிட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்து வாக்குப்பதிவு பணிகளை பார்வையிட தாமதம் ஆகும் என்பதால், அவர் நேற்று வாக்களிக்க சொந்த ஊர் செல்லவில்லை என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதேபோல, கோவை குனியமுத்தூரில் வசித்து வரும் புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடுவதால் நேற்று வாக்களிக்கவில்லை, என்று தெரிவிக்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்