Rock Fort Times
Online News

தே.ஜ.கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு…!

பாஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். உடல்நிலையை காரணம் காட்டி, துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் செப். 9ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் பார்லிமென்டின் இரு அவைகளின் (லோக் சபா, ராஜ்ய சபா) எம்பிக்கள் (782 பேர்), துணை ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர். தேர்தலில் பாஜ கூட்டணி தரப்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து பாஜ பார்லிமென்ட் குழு கூட்டம் டில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஆக.17) நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு பிறகு, தே.ஜ.கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்