Rock Fort Times
Online News

மலைவாழ் கிராமங்களுக்கு பஸ் வசதி- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…!

அரசு முறை பயணமாக இரண்டு நாட்கள் திருச்சி வருகை தந்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கியும், பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்தும், தொடங்கி வைத்தும் உள்ளார்.  இந்நிலையில்  திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், தெனபரநாடு கிராமம் புத்தூர் திடலில் இன்று(01-08-2024) நடைபெற்ற அரசு விழாவில்  மலைவாழ் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பஸ் வசதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  மேலும், போக்குவரத்து துறையின் சார்பில் அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய நடைமுறையில் உள்ள விடியல் பயணம் திட்டத்தின் கீழ் மலைவாழ் பெண்களுக்கு விலையில்லா டிக்கெட்டுகளை வழங்கினார்.  விழாவில்,  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பள்ளிக்கல்வித்துறை துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறப்பு திட்ட செயலாக்க அரசு முதன்மை செயலாளர் தரேஸ் அகமது,  மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார்,  மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.செளந்திர பாண்டியன், ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன், சீ.கதிரவன், ப.அப்துல்சமது,
போக்குவரத்து துறை பொது மேலாளர் (திருச்சி மண்டலம்)ஆ.முத்து  கிருஷ்ணன், பொது மேலாளர் முகம்மது நாசர்(கூட்டாண்மை தொழில்நுட்பம்) மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்