திருச்சியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனைகள் மூலம் நோயாளிகளுக்கு நவீன மருத்துவ கருவிகள் மூலம் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் டி. செங்குட்டுவன் ஆகியோர் இந்த சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தனர்.

பெங்களூரு மருத்துவக் கல்லூரியின் பிளாஸ்டிக் சர்ஜரி துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்மிதா செகு மற்றும் சென்னை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜரி துறைத் தலைவர் பேராசிரியர் ஏஞ்சலின் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் டி. செங்குட்டுவன் கூறுகையில், கண்டோன்மெண்ட் காவேரி மருத்துவமனையில் நவீன தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் டெல்டா பிராந்தியத்தில் முழுநிலை தீக்காயப் பிரிவு வாய்ந்த ஒரே தனியார் மருத்துவமனையாக காவேரி மருத்துவமனை மாறியுள்ளது. இப்பிரிவு பெரியவர்களுக்கான சிகிச்சையை வழங்கும். குழந்தைகளுக்கான தனி தீக்காய சிகிச்சை பிரிவு ஏற்கனவே ‘மா காவேரி’ வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், காவேரியின் குழந்தைகள் தீக்காய சிகிச்சைப் பிரிவில் மிகக் கடினமான நிலைகளில் கூட பல உயிர்களை காப்பாற்றி உள்ளோம் என்று தெரிவித்தார். காவேரி மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.ஸ்கந்தா, கடும் தீக்காயம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கூட காப்பாற்றி உள்ளோம் என்று தெரிவித்தார். தென் தமிழ்நாட்டில் இச்சிகிச்சையை வழங்கும் முதல் தனியார் மருத்துவமனை காவேரி மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது. தீக்காயச் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நாட்டின் சிறந்த வசதிகளுக்கு இணையான வசதிகள் தற்பொழுது திருச்சி காவேரி மருத்துவமனையில் உள்ளது என்பதை உணர்த்துவதற்காகவும், நாளை பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) தொடர் மருத்துவக் கல்வி (சி.எம்.ஈ) நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Comments are closed.