மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியத்தில் உள்ள புரவி நகரில் சொத்து தகராறில் தம்பியே அண்ணனை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்தார்.
திருச்சி குட்செட் ரோடு அகிலன் தெருவை சேர்ந்தவர் ஹரிராஜன் (44) . மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் புரவி நகரை சேர்ந்தவர் சரவணன் (40) அண்ணன் தம்பிகளான இவர்கள் இருவருக்கும் சொத்து பாகம் பிரிப்பதில் மனஸ்தாபம் இருந்து வந்தது. இதில் தம்பி சரவணன் குடித்துவிட்டு அடிக்கடி தனது அண்ணன் மற்றும் தந்தையிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 17 ம் தேதி நொச்சியத்தில் உள்ள புரவி நகரில் தனது தந்தை சந்திரசேகரனுடன் ஹரிராஜன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தம்பி சரவணன் பீர் பாட்டிலால் ஹரிராஜனை தாக்கினார். இதில் படுகாயமடைந்த ஹரிராஜன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று ஹரிராஜன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் சரவணன் மீது மண்ணச்சநல்லூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.