Rock Fort Times
Online News

லஞ்சப்புகார் எதிரொலி- குற்றப்பிரிவு போலீசார் 6 பேர் பணியிட மாற்றம்….

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை..

திருச்சியில் மாவட்ட குற்றப்பிரிவு 2 (முன்பு நில அபகரிப்பு தடுப்பு பிரிவாக செயல்பட்டது) அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த பிரிவில் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆல்பர்ட் என்பவர், அண்மையில் ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே, லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் பத்திர எழுத்தருக்கு, வழக்கில் சாதகமாக செயல்படுவதற்காக ரூ.1 லஞ்சம் வாங்கிய வழக்கில், கைது செய்யப்பட்ட ஆல்பர்ட் துறை ரீதியான நடவடிக்கையில் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் ஐபிஎஸ் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டார். இதில், டிஎஸ்பிக்கு லஞ்சம் பெறுவதில் துணையாக செயல்பட்டதாக, அதே அலுவலகத்தில் பணியாற்றிய பெண் தலைமைக் காவலர் ஹேமாகேத்தரின் என்பவர் செப்டம்பர் 22–ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், இப்பிரிவு அலுவலகத்தில் பணிபுரிந்த போலீசார் அனைவருமே புகார்தாரர்களிடம் மொத்தமாக பணம் வாங்கி பங்கு பிரித்து கொள்வது தெரியவந்தது. இதனையடுத்து, குற்றப்பிரிவு 2 அலுவலகத்தில் பணியாற்றிய துணை ஆய்வாளர்கள் கோதண்டபாணி, பெரியசாமி, தலைமைக் காவலர்கள் கவிதா, மற்றொரு கவிதா, குமரேசன், வெங்கடேசன் ஆகிய 6 பேரும் முசிறி, லால்குடி, மணப்பாறை பகுதிகளுக்கு பணியிடமாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர்
வீ. வருண்குமார் ஐபிஎஸ்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்