திருச்சி, பாலக்கரை கோரிமேடு தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான். இவர் மடிக்கணினி பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றிருந்தார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 10 பவுன் நகைகள் திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்து பாலக்கரை போலீசில் ரிஸ்வான் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.