திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று (செப்டம்பர் 2) மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டு கண்டறியும் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்டனர்.
ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இருந்தாலும் மின்னஞ்சல் அனுப்பியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல சமீபத்தில் திருச்சி மாநகராட்சி அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.