Rock Fort Times
Online News

திருச்சி, லால்குடி பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… * அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தப்பட்டதால் பரபரப்பு( வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரபல பள்ளி, கல்லூரிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தீவிர சோதனைக்கு பிறகு அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி பழைய பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலமாக காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தெரிவித்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் செந்தில்நாதன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் லால்குடி பழைய பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்று மோப்பநாய் உதவியுடன் அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை, அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்