Rock Fort Times
Online News

நாகமங்கலம் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து முற்றுகை போராட்டம்…!

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 10 முதியவர்கள் தங்களுக்கு அரசு வழங்கும் முதியோர் உதவி தொகை பெற வேண்டி விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்டதற்கு கிராம நிர்வாக அலுவலர் முத்தமிழ்செல்வி முதியோர்களை தர குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், விரக்தி அடைந்த முதியவர்கள் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து இந்திய குடியரசு கட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி உடன் நாகமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் முத்தமிழ்செல்வி பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
இச்சம்பம் பற்றி மணிகண்டன் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியதோடு இப் பிரச்சனை சம்பந்தமாக ஸ்ரீரங்கம் தாசில்தாரை சந்தித்து முறையிட அறிவுறுத்தியதை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்