சேலம் மாவட்டம், அண்ணா பூங்கா முன்பு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலையின் கால் பகுதியில் கருப்பு பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவம் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே வேகமாக பரவியது. இதனால் அவர்கள் சிலை முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதில் ஈடுபட்ட வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். சிலை மீது பெயிண்டை ஊற்றியவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. கண்காணிப்புக் கேமரா காட்சிகளின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.