பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தது தவறு, மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா விமர்சித்து வந்தார். இதனால், அவர் கட்சி கோட்பாடுகளை மீறி செயல்பட்டதாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சென்னை அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். பின்னர், திமுகவுடன் இணைந்தது ஏன் என்பது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், பேரறிஞர் அண்ணா தலைமையில் கருத்தியல் ரீதியாக வளர்ந்தவர்கள் நாங்கள். பாஜகவின் கையில் அதிமுக சிக்கி இருக்கிறது. அதிமுகவை அழிப்பது தான் பாஜகவின் நோக்கம். அதிமுகவை அழித்துவிட்டு திமுகவுடன் போட்டி போடுவதே பாஜகவின் திட்டம். பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற என் மனதின் ஆதங்கத்தை தலைமைக்கு தெரிவித்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.அவர்கள் எதிர்மறை சக்தியாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.