Rock Fort Times
Online News

பாஜக கிராமசபை கூட்டம்: விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்…* நயினார் நாகேந்திரன்..!

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் எட்டரை கிராமத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மலர், வாழை மற்றும் நெல் சாகுபடி தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தனர். இதில் மலர் விவசாயிகளுக்கான வாசனை திரவிய தொழிற்சாலை அமைத்தல், வாழை மற்றும் நெல் பயிர்களுக்கு உரிய ஆதார விலை, உரம் மற்றும் பூச்சி மருந்துகளுக்கு மானியம், காவிரி–கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணை அமைத்தல், பள்ளி கட்டிடம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இக்கூட்டத்தில் மாநில செயலாளர் மீனாட்சி, பாஜக திருச்சி நகர மாவட்ட தலைவர் கே.கே. ஒண்டிமுத்து, மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன், திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினர் நாகேந்திரன் “தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றதும், விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும். மலர் விவசாயிகளுக்கான வாசனை திரவிய தொழிற்சாலை, நெல் மற்றும் வாழைக்கான ஆதார விலை உயர்வு, தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்” என்றார். மேலும், விவசாயிகள் நலனில் அக்கறை காட்டாமல் அரசியல் வாரிசு நோக்கில் செயல்பட்டு வரும் தற்போதைய முதல்வருக்கு எதிராக மக்கள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்