Rock Fort Times
Online News

பிற கட்சி பிரச்சனையில் பா.ஜ.க தலையிடாது – தமிழக பா.ஜ.க. தலைவா் அண்ணாமலை

வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை பா.ஜ.க தீா்த்துள்ளதால் அந்த மாநில மக்கள் பா.ஜ.க விற்கு வாக்களித்துள்ளார்கள். காங்கிரஸின் கோட்டையாக இருந்த வடக்கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் முழுவதுமாக துடைக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி தான். காங்கிரஸ் வீழச்சியடைய காரணம் கட்சியில் தொண்டர்கள் இல்லை, வழிநடத்தும் தலைவர்களும் இல்லை என்றாா். ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும். இந்த வெற்றி தி.மு.க வின் 23 மாத ஆட்சிக்கு மக்கள் கொடுத்த வெகுமதி அல்ல. 2024 ஆம் ஆண்டு தேர்தல் களம் முற்றிலும் வேறுபட்டு இருக்கும் அது பிரதமர் நரேந்திர மோடியை மையமாக வைத்தும் நடக்கும் தேர்தல் என்றாா். தி.மு.க கூட்டணியிலுருந்து வெளியே வர வேண்டும் என திருமாவளவன் முடிவு செய்து விட்டார். திருமாவளவன் கண் முன்னால் அவர் கோட்டை என கூறப்படும் கடலூரில் பா.ஜ.க வளர்ந்துளது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் என்றாா். யாரையும் அரவணைப்பது என் கடமையல்ல. 2021 க்கு முன்பு எப்படி இருந்தது என்பது எனக்கு தெரியாது நான் தலைவராக பொறுப்பேற்ற பின்பு ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். நான் பா.ஜ.க வின் தலைவராக இருக்கும் வரை மற்ற கட்சியின் பிரச்சனையில் பா.ஜ.க தலையீட கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன். அ.தி.மு.க வில் பிரிந்திருப்பவர்களை இணைப்பது எங்கள் வேலை அல்ல. பிரதமர் மோடியை விஷ்வகுருவாக ஏற்றுக்கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம். பத்தாண்டுகள் ஆட்சியிலிருந்த கட்சி தொடர்ந்து வெற்றி பெறும் என நினைப்பது தவறு, அரசுக்கு எதிரான மன நிலை மக்களுக்கு இருக்கும். அதுனால் தான் அ.திமு.க 2021 ல் தோல்வி அடைந்தது. காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் 2024 லிருந்து 2026 வரை மிகப்பெரிய எழுச்சியாக இருக்கும். வருகிற 2024 தேர்தல் அது பா.ஜ.கவிற்கானது. அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி தினமும் பா.ஜ.க வை விமர்சிக்கிறார்கள் என்றாா்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்