கோவை சிட்ரா கலையரங்கில் சாதனை மகளிர் சங்கமம் என்ற அமைப்பின் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் 12 பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள், உங்களால் தான் நாங்கள் இருக்கின்றோம் இந்த நாடு இருக்கிறது. பாஜக வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு, அதற்கான முயற்சி தான் என்னிடம் உள்ளது. இன்னொரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளர கூடாது,அவ்வாறு வளர்ந்தாலும் கூட அது தொடர்ந்திருக்க கூடிய வளர்ச்சியாக இருக்காது. பாஜக தமிழகத்தில் தனக்குரிய இடத்தை கண்டுபிடித்து தமிழக மக்களின் அன்பை பெற்று அது வளர வேண்டும். நான் நேற்று மதுரை சென்னை இடங்களில் என்னுடைய கருத்தாக, என்ன பேசி இருக்கின்றேனோ அது தான் என்னுடைய கருத்து அதிலிருந்து ஒரு படி மேலும் கிடையாது கீழும் கிடையாது. அதேபோல் என்னைப் பற்றி சிலர் ஏதாவது கூறினால் அந்த கருத்து என்னுடைய கருத்தை பாதிக்காது. நான் என்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கிறேன், அவர்கள் அவர்களுடைய கருத்தில் உறுதியாக இருக்கட்டும் அதில் எந்த ஒரு தவறும் இல்லை. வேறு வேறு கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் ஒரு வளர்ந்த கட்சியில் இணைந்து தலைவர்களாக இருக்கிறார்கள் என்று கூறினாா்.

பாஜக தொண்டன் யாரும் போகாத பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள். அதனால் எங்களுடைய பாதை தனியாகத்தான் இருக்கும். எனவே இதை யாருடனும் ஒப்பிட வேண்டாம். பாஜக அதிமுகவுடன் ஒப்பிடாதீர்கள், கூட்டணி கட்சிகளுடன் ஒப்பிடாதீர்கள் ஆளும் கட்சியுடன் ஒப்பிடாதீர்கள். பல்வேறு கட்சிகளில் இருக்கக்கூடிய தலைவர்கள் அந்த கட்சி வளர்ந்த பிறகு தான் அதில் இணைந்துள்ளார்கள். ஆனால் பாஜக தொண்டர்கள் அவ்வாறு இல்லை எப்பொழுது பாதுகாக்க ஆட்சிக்கு வரும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவில் இருக்கக்கூடிய தலைவர்கள் அதிமுகவை பாஜகவுடன் ஒப்பிட்டால் அது சரியான ஒப்பிடல் இல்லை. அதேபோல் மற்றொரு கட்சித் தலைவர்கள் ஒப்பிட்டாலும் அதுவும் சரியான ஒப்பிடல் இல்லை. எங்களுடைய பாதை தனித்தன்மையான பாதை. நான் இதிலிருந்து மாற மாட்டேன் இவ்வாறு தான் இருப்பேன் என்று கூறினாா். இன்னும் ஆறு மாதத்தில் பெரிய பெரிய தலைகள் செல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. பெரிய பெரிய தலைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அரசியல் கட்சி என்பது அப்படி தான் இருக்கும் என்றாா். மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி, உத்தம ராமசாமி உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

**mitolyn official**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.