Rock Fort Times
Online News

திமுக பிரமுகர் நா.வேல்முருகன் பேரன் பிறந்தநாள் விழா !

- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் கிழக்கு மாநகர விவசாய அணியின் தலைவர் நா.வேல்முருகன் அவர்களின் மூத்த மகன் வித்யாசாகர் – திவ்யபாரதி தம்பதியினரின் மகன் வருன்கிருஷ்ணாவின் முதலாவது பிறந்தநாள் அக்டோபர் 13ம் தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் உள்ள ஶ்ரீ சங்கீதாஸ் ஹோட்டலின் சக்ரா ஹாலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு குழந்தையை ஆசீர்வதித்து வாழ்த்தினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், தொழிற்சங்க பிரமுகர் எம்.ஆர்.மாயழகு, பி.எஸ்.அருண், தனக்கோடி, குணசீலம் ஊராட்சி மன்ற தலைவர் குருநாதன், ராக்போர்ட் டைம்ஸ் வார இதழின் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.லெக்ஷ்மி நாராயணன், ஆக்ஸினா குரூப் ஆஃப் கம்பெனிஸ் சேர்மன் ஜெயகர்ணா, விராலிமலை ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் ஏ.வி.ராஜேந்திரன், கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு குழந்தையை வாழ்த்தி மகிழ்ந்தனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை சின்ராஜ், பத்தாலப்பேட்டை திமுக கிளை செயலாளர் சண்முகம், திருவெறும்பூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் மற்றும் வே.விக்னேஷ்வரன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்