திருச்சி மாவட்ட வியாபார கழக தலைவர் ஜே.ஜே.எல். ஞானராஜ் பிறந்த நாள் விழா…* அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் நேரில் வாழ்த்து!
திருச்சிராப்பள்ளி மாவட்ட வியாபார கழக தலைவர் ஜே.ஜே.எல். ஞானராஜின் 88வது பிறந்தநாள் விழா அவரது அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு செயலாளர் ஏ.ஜார்ஜ்ராய் வரவேற்புரையாற்றினார். துணைத்தலைவர்கள் ஆர்.கே.கணேஷ் பிரபு, ஜி.ரேன்சன்தாமஸ் ஆரோக்கியராஜ், இணைச்செயலாளர் டி.சீத்தாராமன், உதவி செயலாளர் பி.பத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, திமுக பகுதி செயலாளர் ஆர்.ஜி.பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி.ஜெரோம் ஆரோக்கியராஜ், மாநில செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன், திருச்சி வெல்லமண்டி சங்க செயலாளர் ஏ.பிச்சை, தமிழ் மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் புங்கனூர் எஸ்.செல்வம், எம்.ரவிச்சந்திரன், லாரி அசோசியேஷன் டி.சுரேஷ்குமார், சுமதி பப்ளிகேஷன்ஸ் ஆர்.வசந்தகுமார், சக்தி எண்டர்பிரைசஸ் கே.திலகர், நோயல் செல்வராஜ், பெட்ரோல் பங்க் அதிபர் ஜி.சார்லஸ் ஆரோக்கியராஜ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பி.மகாலிங்கம், ஏ.பாலசுப்பிரமணியன், சி.பி.சிங்காரவேலு, எம்.கண்ணன், என்.கே.இஸ்மாயில்கான், ஆர்.உமாபதி, சக்திவேல், பாலகிருஷ்ணன், கே.டி.டி.தங்கவேல் மற்றும் வியாபார கழக நிர்வாககுழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு வணிக பிரமுகர்கள், அனைத்து அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள், தொழிலதிபர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் பொருளாளர் கே.டி.தனபால் நன்றி கூறினார்.


Comments are closed.