தமிழறிஞர் வீரமாமுனிவரின் 343-வது பிறந்தநாள் விழா கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல திருச்சி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் திருச்சி எடத்தெரு பழைய கோவிலில் உள்ள வீரமாமுனிவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் ஜான் பிரகாஷ் எபினேஷன், மத்திய மண்டல செயலாளர் அலெக்ஸ் ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். பாதிரியார் தாமஸ், பாதிரியார் விஜய் பெலவேந்திரன் ஆகியோர் ஆசியுரை வழங்கினர். மாநில துணை அமைப்புச் செயலாளர் பாஸ்டர் சாம்ராஜ், மாநில ஆர்.சி. துணை அமைப்புச் செயலாளர் வின்சென்ட், மாவட்ட அவைத் தலைவர்கள் ஜேக்கப் ஆண்ட்ரூஸ், மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் தேவராஜ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிர்வாகிகள் பிரான்சிஸ் சேவியர், ஆரோக்கியராஜ் , ஜெரால்ட், எட்வர்ட், மகளிர் அணி நிர்மலா ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.