Rock Fort Times
Online News

பாரதிதாசன் பல்கலை.யில் மே 2 முதல் கோடைகால சிறப்புப் பயிற்சிகள் தொடக்கம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஜாமலை வளாகத்தில் அமைந்துள்ள தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம் (ஐஇசிடி) சார்பில் மே 2-முதல் கோடைகால பயிற்சிகள் தொடங்கவுள்ளது. இதில் அடிப்படை கணினி இயக்கம், டேலி ப்ரைம், அச்சுக்கலைப் பதிப்பகவியல், கைப்பேசி பழுதுநீக்கம் மற்றும் சர்வீஸ், ஆங்கிலப் பேச்சு, ஆளுமை திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. மிகக்குறைந்த பயிற்சிக் கட்டணத்தில் அளிக்கப்படும் இப்பயிற்சி வகுப்புகளுக்கு எஸ்.சி, மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 50% உதவித்தொகையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 25% உதவித்தொகையும், மாற்றுத்திறனுடையோருக்கு 100% உதவித்தொகையும் வழங்கப்படும்.

 

பயிற்சி வகுப்புகள் காலை 9.30 முதல் பகல் 1.30 மணி வரையும், பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நான்கு மணி நேரம் வீதம் 2 பிரிவுகளாக வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நடத்தப்படும். ஏப்ரல் 22 முதல் சேர்க்கை நடைபெறும். பயிற்சிகள் மே மாதம் 2 ஆம் தேதி தொடங்கி 31 வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 0431-2332 638, 63819 16747 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்