திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டு டிசம்பர் 21 முதல் 28 ஆம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் சு. சீனிவாச ராகவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பது :
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான நவம்பர் 2023 பருவத் தேர்வுகள் டிசம்பர் 11 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சில தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால் இத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்து தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தேர்வு அட்டவனை குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து பல்கலைக்கழகம் நேற்று ( 13.12.2023 ) அறிவித்துள்ளது. அந்த வகையில், டிசம்பர் 21 முதல் 23 ஆம் தேதி வரையிலும், பின்னர் 26 முதல் 28 ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமையொட்டியும், 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டியும் விடுமுறை தினங்களாகும்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.