பாரத பெண்கள் ஐகானிக் அவார்ட்ஸ்-2025: சாதனை மகளிருக்கான விருது வழங்கும் விழா… * திருச்சியில் மார்ச் 30ம் தேதி நடைபெற்றது
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 30ம் தேதி, திருச்சி தில்லைநகர் 10-வது கிராஸில் உள்ள ராம்ஸ் ரெஸ்டாரெண்டில் பாரத பெண்கள் ஐகானிக் அவார்ட்-2025 எனும் சாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. சென்னையை சேர்ந்த வி3 எண்டர்டெய்மெண்ட் நிறுவனம் நடத்திய இவ்விழாவில் சமூகம், பொருளாதாரம், கல்வி, தொழில்துறை, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில், திருச்சி மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, ராக்போர்ட் டைம்ஸ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.லெக்ஷ்மி நாராயணன், கல்யாணி கவரிங் நிர்வாக இயக்குனர் மணிகண்டன், ஆர்விஎஸ் இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர் டி.எம்.சந்திரலேகா விஜயாலயன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இதில் திருச்சி யோகசாலா நிறுவனர் துர்கா மணிகண்டன், யுகா பெண்கள் நல்வாழ்வு அமைப்பின் நிறுவனர் மற்றும் ஐகான்ஸ் ஐஏஎஸ் அகாடமி மேலாண்மை இயக்குனர் அல்லிராணி பாலாஜி, சமூக சேவகர் கே.கீதாராணி, திருச்சி கோட்ட ரயில்வேயின் முதல் பெண் லோகோ பைலட் நாராயண வடிவு, டால்பின் சிறப்பு பள்ளி நிறுவனர் ஜி.பிரவீனா கார்மெல், லிம்ராஸ் லக்ஸ் சலூன் அண்ட் ப்யூட்டி அகாடமி நிறுவனர் ஃபர்ஷானா கான், ஓஎம்ஜி ஃபுட்ஸ் நிறுவனர் ஜெயஸ்ரீ சுரேஷ், ஓலைச்சுவடி ஆய்வாளர் ஏ.ரம்யா, திருச்சி ஏஎம்எஸ் அசோசியேட்ஸ் பங்குதாரர் ஆடிட்டர் எல்.முத்துக்கலா உள்ளிட்ட பலதுறைகளில் சாதித்த 30 பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வி3 எண்டர்டெய்மெண்ட் நிறுவனர் லியோ விஜய், முதன்மை செயல் அதிகாரி விஜயலெட்சுமி மற்றும் வெங்கடலெட்சுமி, மணிகண்டன், பல்லவி உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறுவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Comments are closed.