பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசாருக்கு தமிழக காவல்துறை ஆணையிட்டுள்ளது. மேலும், சந்தேகப்பட்டியலில் உள்ள நபர்களையும், அவர்களின் நடமாட்டங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது . அதன்படி, திருச்சி ரயில்வே ஜங்ஷனில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயில் பெட்டிகள் முழுவதும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நிபுணர்களைக் கொண்டு சோதனை மேற்கொண்டனர். இதேபோல தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபர்களை அழைத்து தீவிர விசாரணை செய்த பிறகே அனுப்பி வைக்கின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.