Rock Fort Times
Online News

பைக்கில் வந்த வழிப்பறி கொள்ளையா்கள் – ஒருவா் கைது..

மதுரை மாவட்டம் சிலைமான் பகுதி சர்வே சிட்டி காலனியைச் சேர்ந்தவர் துளசிராஜன் (27). திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் கூத்தூர் பஸ் ஸாடாப் அருகே துளசிராஜன் சென்று கொண்டிருந்தார். அப்போது கருப்பு மாஸ்க் அணிந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துளசிராஜனின் மொபைல், மொபைல்சார்ஜர், ரூ.20900 ஆகியவற்றை வழிப்பறி செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து துளசிராஜன் கொள்ளிடம் டோல்கேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தாா். புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது வழிப்பறியில் ஈடுபட்டது மண்ணச்சநல்லூர் வெங்கங்குடி மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த மணிமாறன் மகன் கெளசிக் (20) என்று தெரியவந்தது. கௌசிக்கை கைது செய்த போலீசார் உடன் வந்த நபர் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்