Rock Fort Times
Online News

தமிழக உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்…!

உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலையைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், பொருளாதார குற்றப்பிரிவு யுஜிபி பாலநாகதேவி, உளவுத்துறை யுஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி சந்தோஷ் குமாருக்கு, பொருளாதார குற்றப்பிரிவு ஏயுஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத்துறை ஐஜி ரூபேஷ் குமார் மீனாவுக்கு, குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத்துறை ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்