Rock Fort Times
Online News

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பேட்மிண்டன் போட்டி தொடங்கியது…!

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஜூனியர் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் ரெயின்போ ராக்கர்ஸ், திருச்சி தமிழ் வீரர், திருவாரூர் டெல்டா கிங்ஸ், விருதை வெங்கைஸ், கோவை சூப்பர் கிங்ஸ், சென்னை சிட்டி கேங் ஸ்டர்ஸ், தஞ்சை தலைவாஸ், மதுரை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் கலந்து கொள்கிறது. மேலும், JBL – சீசன் 2 போட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. போட்டியை பாட்டாளி மக்கள் கட்சி தலைவா் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு பூப்பந்து சங்கத்தின் தலைவர் வி. அருணாசலம் , ஜமால் முகமது கல்லுாாியின் உதவி செயலாளா் டாக்டா். K. அப்துஸ்சமத், கல்லுாாியின் முதல்வா் டாக்டா். S. இஸ்மாயில் முகைதீன் , பொருளாளா் ஹாஜி M.J.ஜமால் முகமது கலந்துகொண்டனா் . மேலும் இந்த போட்டி 15ம் தேதி வரை நடைபெறும் . இந்நிகழ்ச்சியின் இறுதி நாளான 15 ஆம் தேதி மாலை இசை அமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்