சந்திர கிரகணம் என்பது பௌர்ணமி முழுநிலவு நாளில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது ஏற்படும். இந்தியாவில் 2022-ம் ஆண்டுக்குப் பின் முழு சந்திர கிரகணம் நேற்று (செப்.7) வானில் தென்பட்டது. நள்ளிரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணமாக மாறி, இன்று( திங்கட்கிழமை) அதிகாலை 2.25 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பொதுமக்கள் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திருச்சியில் பெய்த மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சந்திர கிரகணம் தென்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும் திருச்சியில் அண்ணா அறிவியல் கோளரங்கம், தென்னூர் அறிவியல் பூங்கா, பிஷப் ஹீபர் கல்லூரி , துறையூர் , கே.கே.நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்த டெலஸ்கோப் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை ஏராளமானோர் வருகைதந்து, ரத்த சிகப்பு நிறத்தில் தோன்றிய நிலவின் எழில்மிகு அழகை கண்டனர். இதே போன்ற சந்திர கிரகணம் அடுத்து 2028 டிசம்பா் 31-ம் தேதி தான் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.