கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் , நாயக்கன்பாளையத்தில் அபராஜிதா(சத்தியராஜின் சகோதரி) என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு தோட்டத்து வீடும்(farmhouse) உள்ளது. இங்கு எப்போதாவது தான் அவர்கள் வந்து செல்வார்கள் . இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டமும் உண்டு. இந்நிலையில் அந்த வீட்டின் அருகில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனையடுத்து அங்கு பணிபுரிவோர் சென்று பார்க்கையில், தோட்டத்து வீட்டின் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குட்டியானை இறந்து கிடந்தது. உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அங்கு சென்ற பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் குழுவினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த குட்டியானைக்கு 1 வயது இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு கோவை மாவட்ட வன அலுவலர் மற்றும் உதவி வன பாதுகாவலர் ஆகியோர் விரைந்துள்ளனர். ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நாளை உடற்கூறாய்வு பரிசோதனை செய்யப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகாித்துவருகிறது என்பதற்க்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.