டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமாகும். இன்னாளில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருச்சி மரக்கடை முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் இன்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் மக்களை பிளவுபடுத்தக்கூடிய சில இந்து அமைப்பினரின் கொள்கைகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா, மேற்கு மாவட்ட தலைவர் அகமது ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்டச் செயலாளர் இப்ராம்ஷா, மாவட்ட மமக செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்சமது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதேபோல, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட பொது செயலாளர் முகமது சித்திக் வரவேற்றார். தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜீத், அப்பாஸ், மாவட்ட பொருளாளர் டாக்டர் பக்ருதீன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சதாம் உசேன், தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பொன்னகர்.ரபீக், முபாரக் அலி,ராஜா முகமது, ரஹிம், அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி. ஐ.கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், ஜமாத்துல் உலமா சபையின் திருச்சி மாநகர் தலைவர் அப்துல் சலாம் அன்வாரி, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் ஆலிமா மெஹ்ராஜ் பானு ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், எஸ்.டி.டி.யு. மாநில செயலாளர் முஹம்மது ரபீக், மாவட்ட தலைவர் முஸ்தபா, மாவட்ட துணைத் தலைவர் மீரான்மைதீன் மற்றும் வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் ஷேக், மருத்துவர் அணி தலைவர் டாக்டர் இக்பால், விம் மாவட்ட தலைவர் தௌலத் நிஷா , கல்வியாளர் அணி ஒருங்கிணைப்பாளர் பத்ரு ஜமான், ஊடக அணி மாவட்ட தலைவர் ரியாஸ் மற்றும் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, மாநகரின் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர், கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.