Rock Fort Times
Online News

உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

துணை போலீஸ் கமிஷனர் அன்பு பங்கேற்பு...

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ஆண்டுதோறும் உலக கண்பார்வை தினத்தன்று மக்களுக்கு கண் பார்வை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் உலக கண் பார்வை தினமான இன்று ( 12.10.2023 ) திருச்சி ஜோசப் கண்மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் திருச்சி பட்டர்பிளைஸ், டயமண்ட் சிட்டி குயின்ஸ் மற்றும் ஜமால்முகமது கல்லூரி இணைந்து உலக கண்பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. ஜமால் முகமது கல்லூரி தாளாளர் டாக்டர் காஜா நஜீமுதீன், கல்லூரி முதல்வர் முகமது இஸ்மாயில் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரதீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ரோட்டரி பட்டர்பிளை, டயமண்ட் சிட்டி குயின்ஸ் சங்கங்களின் தலைவர்கள்
சுபா பிரபு, சிவா சரண்யா, செல்வராஜ், செயலாளர்கள் பராசக்தி, பிரியா லோகநாதன்
மற்றும் ரோட்டரி மாவட்டம் 3000ன் முன்னாள் ஆளுநர் கோபால் , இரு சங்களைச் சார்ந்த உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதனைத்தொடர்ந்து ஜோசப் கண் மருத்துவமனையில் விழிப்புணர்வு பலூன் பறக்க விடப்பட்டது. பின்னா் திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர் அன்பு, உதவி போலீஸ் கமிஷனர் குத்தாலிங்கம் ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இதில் ஜமால் முகமது கல்லூரியைச் சார்ந்த மாணவ மாணவிகள் மற்றும் கண் மருத்துவமனை நிா்வாகிகள், ஊழியா்கள் கலந்து கொண்டு கண்களை பாதுகாத்துக் கொள்வாம் என்று விழிப்புணா்வு ஏற்படுத்தியதோடு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி
சுபாபிரபு நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்