திருச்சி உறையூர் குறத்தெரு செவ்வந்தி பிள்ளையார் கோவில் தெருவில் ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் (வயது 60) குடியிருந்து வருகிறாா். இவர் கடந்த 8-ந் தேதி இரவு 9 மணி அளவில் தனது வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது ஆட்டோவின் பின்புரத்தில் கதவு திறக்கப்பட்டு பேட்டரி திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து உறையூர் காவல் நிலையம் சென்று குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளாா். புகாரை பெற்றுக் கொண்ட குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் பாத்திமா வழக்கு பதிவு செய்து பேட்டரி திருடி சென்றவர்களை தேடி வருகின்றனர், கடந்த ஒரு வார காலமாக உறையூர் பகுதிகளில் ஆட்டோவில் பேட்டரி திருடுவது வழக்கமாக நடந்து வந்து கொண்டிருக்கிறது

Comments are closed, but trackbacks and pingbacks are open.