ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தநிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ்ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட்டின் அதிரடி ஆட்டத்தால் 337 ரன்கள் குவித்துள்ளது. டிராவிஸ் ஹெட், ஒன் டே மேட்ச் போல வெளுத்து வாங்கினார். அவர் 141 பந்துகளில் 140 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதில், 17 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். இதன்மூலம், 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பகல் – இரவு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதமடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 3 இடங்களிலுமே டிராவிஸ் ஹெட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இந்திய வீரர்கள, பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ் 4 விக்கெட்களும் கைப்பற்றினர். முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி 157 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதன் பிறகு இந்திய அணி தனவு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய வீரர்கள் சொதப்பினால் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு உருவாகும்.
Comments are closed.