திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு நாளான நாளை (ஆகஸ்ட் 7) காலை 8 மணியளவில் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செயற்குழு- பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக்கழகங்கள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
Comments are closed.