திருச்சி மாவட்டம், மணிகண்டம் காவல்நிலையத்தில் ஆர். இளங்கோவன் என்பவர், சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் காவல் நிலையத்துக்கு வரும் புகார்களை பெற்றுக் கொண்டு, புகாரை விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் லஞ்சம் வாங்குவதாக திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு புகார்கள் சென்றன. இது ஒருபுறம் இருக்க மனுதாரர் ஒருவரிடம், இளங்கோவன் லஞ்சம் கேட்கும் ஆடியோ லீக் ஆனது. இதனை கேட்ட திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், புகார்தாரரிடம் லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவனை ஆயுதப்படைக்கு டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டார்.

Comments are closed.