Rock Fort Times
Online News

பயணிகள் கவனத்திற்கு: திருச்சி வழியாக இயக்கப்படும் விடுமுறை கால ஸ்பெஷல் ரயில்கள்..!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறையையொட்டி, முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, தெற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்கி வருகிறது. அதன்படி, ஈரோட்டில் இருந்து சேலம், காட்பாடி, சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஈரோடு–நாகர்கோவில் சிறப்பு ரயில் (06025) நாளை(23ம் தேதி) மற்றும் 30ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஈரோட்டில் மாலை 4.00 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு மாலை 5.00 மணிக்கு வந்து, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர் வழியாக நாகர்கோவிலுக்கு அடுத்த நாள் மதியம் 1.15 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக, நாகர்கோவில்–ஈரோடு சிறப்பு ரயில் (06026) நாளை மறுநாள் (24ம் தேதி) மற்றும் 31ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இரவு 11.00 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சேலத்திற்கு அடுத்த நாள் மாலை 5.27 மணிக்கு வந்து, ஈரோட்டிற்கு இரவு 8.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்