திருச்சியில் கர்நாடக தலைவர்களின் படங்களை அவமதிக்க முயற்சி…
நாம் தமிழர் கட்சியினர்- போலீசார் வாக்குவாதம்...
உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றம் தொடர்ந்து அறிவுறுத்தியும்
தமிழகத்திற்கான தண்ணீரை காவிரியில் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து திருச்சி அண்ணாசிலை பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் இன்று ( 30.09.2023 ) ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார், கர்நாடக அமைப்பு நிர்வாகி வாட்டாள் நாகராஜ் ஆகியோரின் உருவ படங்களுக்கு செருப்பு மாலை அணிவிக்க முயன்றனர். உடனே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அதனை தடுத்தனர். இதனால், நாம் தமிழர் கட்சியினர்-போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் கேட்டுக்கொண்டதன் பேரில் ஆர்ப்பாட்டம் மட்டும் செய்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.