திருச்சி ஜங்ஷன் பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இளைஞர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் திடீரென கடையில் பணியில் இருந்த ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரத்துடன் கடைக்குள் புகுந்த வாலிபர் விற்பனையாளர் செல்வேந்திரன் மீது மதுபாட்டிலால் தாக்கினார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்து தடுக்க வந்த 2 பேர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்த இடத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் தாக்குதல் நடத்திய 2 பேரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். உடனே இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க்கு வந்த காவல்துறையினா் காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.