Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுந்த ஏகாதசி ராப்பத்து 5-ம் நாள்: முத்து கிரீட அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்!

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுந்த ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 19 ம் தேதி திருநெடுந்தாண்டகத் துடன் தொடங்கி பகல் பத்து, இராப்பத்து என 21 நாட்கள் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்தவகையில், பகல்பத்து உற்சவம் நிறைவுற்ற நிலையில், டிசம்பர் 30ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இந்நிலையில் இராப்பத்து உற்சவத்தின் 5ம் நாளான இன்று( ஜனவரி 3) பிற்பகல், நம்பெருமாள் முத்துகிரீடம் அணிந்து, சிகப்புகல் ரத்தின அபயஹஸ்தம், மார்பில் சூரியபதக்கம், முத்துமாலை, பவளமாலை அடுக்கு திருவாப ரணங்களை சூடி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப் படுவார்கள். இரவு 10மணிக்கு மீண்டும் நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவார் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்