சென்னையில் கைதியை சிறைக்கு அழைத்துச் செல்லும் முக்கிய பொறுப்பில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன், போலீஸ் வாகனத்திலேயே மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த காவல்துறை உயர் அதிகாரிகள், லிங்கேஸ்வரனை பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டனர். மேலும், அவருடன் அந்த வாகனத்தில் பயணித்த மற்ற காவலர்களில் யாரேனும் பணியின்போது மது அருந்தினார்களா என்று விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அவ்வாறு அவர்கள் மது அருந்தியது உறுதியானால் அவர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments are closed.