Rock Fort Times
Online News

அரிவாளை காண்பித்து பணத்தை பறித்து சென்ற ரவுடி குண்டர் தடுப்பு  சட்டத்தில் கைது…

திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினி ஐபிஎஸ் உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், ஆயுதங்களை காண்பித்து பணத்தை கொள்ளையடிக்கும் குற்றவாளிகள் மீதும்  திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த (07.10.2023)-ந்தேதி காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரகனேரி குழுமிக்கரையில் உள்ள டீக்கடை அருகில் வாரக்குழுவிற்கு செலுத்த வைத்திருந்த பணம் ரூ.3000த்தை அரிவாளை காண்பித்து பறித்து சென்றதாக கொடுத்த புகாரின்பேரில் பிள்ளைமாநகர், எடத்தெருவை சேர்ந்த ரவுடி சரவணபிரபு என்கிற பிரபு (வயது 29) என்பவரை காவல்துறையினா் கைது செய்தனா். மேலும் பிரபு மீது காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் ஆயுதங்களை காண்பித்து பணம் பறித்து சென்றதாக 4 வழக்குகளும், கஞ்சா விற்பனை செய்ததாக ஒரு வழக்கும், கொலை முயற்சி செய்ததாக ஒரு வழக்கு உட்பட 6 வழக்குகள் உள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. எனவே, மேற்கண்ட குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு காந்திமார்க்கெட் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினி ஐபிஎஸ், பிரபுவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள பிரபு மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை கொடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்