Rock Fort Times
Online News

திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் பணம் பறித்தவா் கைது…

கரூர் குளித்தலை சத்திரம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு (வயது 33). இவர் உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவர் வெளி நோயாளிகள் வார்டு பகுதிக்கு  சென்றபோது மர்ம நபர் ஒருவர் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூபாய் 5000 பணத்தை திருடிக் கொண்டு ஓட முயன்றார். உடனே அருகில் இருந்தவா்கள் அவரை கையும் களவுமாக பிடித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்கனா். விசாரணையில் கைதானவர் திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் ( 58 ) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்