திருச்சி அருகே உள்ள ஓலையூர் குடி தெருவை சேர்ந்தவர் அந்தோணிகுமார் (வயது 40). எலக்ட்ரீசியன். அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் வெட்டு சங்கர் (எ) ஜெய்சங்கர் (25). லோடு ஆட்டோ டிரைவர். இருவரும் ஓலையூர் காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான மைதானத்தில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ஜெய்சங்கர் பிளாட்டுக்காக அந்தப் பகுதியில் நடப்பட்டிருந்த கல்லை பிடுங்கி வந்து அந்தோணி குமாரை தாக்கினார்.
இதில், ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்தார். இதனால், பதற்றம் அடைந்த ஜெய்சங்கர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அந்தோணிகுமாரை பரிசோதித்து பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தோணி குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிவிட்ட ஜெய்சங்கரை தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.