பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சியின் 5வது மண்டலத்துக்குட்பட்ட 27 வது வார்டு பட்டாபிராமன் பிள்ளை தெரு பகுதியில் ஆல்செயிண்ட்ஸ் பள்ளியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார் .இந்தக் கூட்டத்தில் சங்கீதபுரம் , ஆட்டுமந்தை தெரு, சவேரியார் கோவில் தெரு , மீன்கார தெரு, மல்லிகைபுரம் , ஜெனரல் பஜார் , வண்ணாரப்பேட்டை, பெருமாள் கோவில் தெரு ,ஜெனரல் பஜார், பென்சனர் தெரு, விஷ்வப்ப நாயக்கன் பேட்டை, ரெங்கநாதபுரம், பட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மேயரிடம் அளித்தனர் . பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார் .
முன்னதாக மேயர் அன்பழகன், 27 வது வார்டு பகுதிகளில் முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். இதேபோல, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகரப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.