திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு மற்றும் அவர்களது உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 16) சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரிய சாமியின் அரசு பங்களாவிலும், சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள ஐ.பெரியசாமியின் மகனும், பழனி தொகுதி எம்எல்ஏவுமான செந்தில்குமார் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். விடுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக, சட்டசபை செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.