Rock Fort Times
Online News

பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லையா?

மாநகராட்சியில் புகார் அளிக்கலாம்..

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் குழு மற்றும் புகார் அளிப்பது தொடர்பாக (PoSh) கமிட்டி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த குழு உறுப்பினர்களுக்கு பாலியல் துன்புறுத்துதல் தடுப்பு சட்டம் 2013 குறித்த விழிப்புணர்வு பயிற்சி மற்றும் அதற்கான தகவல் பலகையை மேயர் மு.அன்பழகன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் திவ்யா, பாலியல் தடுப்பு நிபுணர் முனைவர் விஜயலட்சுமி, லூர்துராஜ், நகர்நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதன்மூலம், பணியிடத்தில் பாலியல் தொடர்பான வன்முறைகள் நீங்கி அனைவரும் நட்புறவோடு செயல்படவும், அதற்கான புகாரை அளிப்பதற்கும் ஏதுவாக அமையும் என தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்