Rock Fort Times
Online News

6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று(ஏப்ரல் 1) ஆண்டு இறுதித்தேர்வு தொடக்கம்…!

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டன. தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வு வருகிற 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் வருகிற 10ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்வுகள் முன்கூட்டியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு இன்று (01-04-2026) முதல் தொடங்குகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 6-ம் தேதி தேர்வுகள் தொடங்குகிறது . இந்தத் தேர்வுகள் அனைத்தும் வருகிற 16-ந்தேதி முடிவடைகிறது. தேர்வுகள் முடிந்ததும் 17-ந்தேதியில் இருந்து மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஆசிரியர்கள் பணிக்கு வர அறிவுறுத்தப்படுவார்கள் எனவும் சொல்லப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடும். விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகளை ஜூன் 4-ம் தேதி திறப்பதற்கு திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்