Rock Fort Times
Online News

ஆம்னி பஸ்கள் இன்று வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு..

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக தமிழ்நாடு முழுவதும் 120 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இன்றுடன் ( 24.10.2023 ) விடுமுறை முடியும் நிலையில் அனைவரும் ஊா் திரும்ப தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென்மாநில ஆம்னி பஸ்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதிக கட்டண வசூல் எனக்கூறி பறிமுதல் செய்யப்பட்ட 120 ஆம்னி பஸ்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்திருந்தனா். ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய சுமார் ஒரு லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியானதால் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், தமிழ்நாடு ஆம்னி பஸ்  உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் ஊா் திரும்ப வசதியாக ஆம்னி பேருந்துகள் இன்று வழக்கம் போல் இயக்கப்படும், மக்கள் பீதியடைய வேண்டாம். எங்கள் சங்கத்தில் 1,500 பேருந்துகள் உள்ளன. அவை அனைத்தும் இயங்கும். வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். இதனால் ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ள சுமாா் ஒரு லட்சம் பயணிகள் நிம்மதியடைந்தனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்