திருப்பூரின், சின்ன காளிபாளையம் பகுதியில் குப்பைகளை கொட்ட மாநகராட்சி முடிவெடுத்திருந்தது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (டிச.18)குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை பங்கேற்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்தனர். இருப்பினும் அனுமதியை மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அண்ணாமலை பங்கேற்க முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடன் மேலும் சில பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அண்ணாமலை கைது செய்யப்பட்டதால் திருப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.