Rock Fort Times
Online News

சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கு விருது…- விண்ணப்பிக்க அண்ணா பல்கலை. அழைப்பு!

சிறந்த பொறியியல் கல்லூரிகள் மற்றும் சிறந்த துறைகள் அறிவுசார் சொத்துரிமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கண்டுபிடிப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவுசார் சொத்துரிமை விருது வழங்கப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி, அழகப்பா தொழில்நுட்பக்கல்வி நிறுவனம் மற்றும் கட்டிடக்கலை கல்லூரியில் சிறந்த 2 துறைகள் அல்லது சிறந்த மையங்களுக்கும், அதேபோல், அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 2 சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கும் அறிவுசார் சொத்துரிமை விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2025-ம் ஆண்டுக்கான அறிவுசார் சொத்துரிமை விருதுக்கு பொறியியல் கல்லூரிகள், துறைகள், மையங்கள் ஏப்ரல் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவுசார் சொத்துரிமை மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் www. annuniv.edu/ipr என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்றும் அம்மையம் தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்