நெல்லை உட்பட 5 மாவட்டங்களில் வருகிற டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் இன்று(19-12-2023) வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக வருகிற 23ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. ஒத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்கத்தில் நாகர்கோவில் மையத்தில் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.